Toothbrush (Tamil)

Toothbrush

மஞ்சள் வெய்யிலின் நிறத்துக்கு ஈடாக நான் சாப்பிட்டுகொண்டிருந்த லெமன் சாதம் பளபளத்துக்கொண்டிருக்க,நான் அதை வெறித்தனமாக கபளீகரம்செய்து கொண்டிருந்ததை அந்த ரயிலின் உள்ள அனைத்து பயணிகளும் கண் இமைக்காமல் பார்த்துகொண்டிருந்த அந்த கண்கொள்ளா காட்சியை வர்ணிக்க எனக்கு வாய் இல்லை.அவ்ளோ பசி. வாய் முழுவதும்சாதம். தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கினது ரொம்ப சௌகர்யமாக இருந்தது.

ஒரு அரை மணி நேரமாக,மானை புலி வேட்டை ஆடுவதுபோல் நான் சங்கீதா ஹோட்டலில் வாங்கிய பார்சலை வேட்டை ஆடி கொண்டு இருந்தேன். இரவு சாப்பாடு இனிதே சுபம் அடைந்ததை கொண்டாடும் விதமாக, பையில் வைத்து இருந்தஆரஞ்சு பழச்சுளைகளை உள்ளே தள்ளி விட்டு, உலகமே அதிரவைக்கும் படியாக ஏப்பத்தை விட்டதும் தான் என்னை சுற்றி இருந்த உலகமே எனக்கு புரிந்தது. திருச்சி ஸ்டேஷன் நாளை காலை 5 மணிக்கு வரும் என்று அம்மா சொல்லி இருக்க, காலை சூரியனை கூட கண்டிராத எனக்கு ஐந்து மணிக்கு முழிப்பது என்பது பிரம்ம பிரயத்னம்.

Continue reading